Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வந்த நந்தி விருது பெற்ற நடிகை நித்யா ஷெட்டி!

05 டிச, 2014 - 10:16 IST
எழுத்தின் அளவு:

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். அவரைத் தொடர்ந்து இப்போது ஐவராட்டம் என்ற படத்துக்காக நித்யா ஷெட்டி என்ற இன்னொரு தெலுங்கு நடிகையும் தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார்.


இவரும் ஸ்ரீதிவ்யாவைப்போலவே சுமார் 30 தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதோடு ஒரு படத்தில நடித்தமைக்காக சிறந்த குழந்தை நடசத்திரத்துக்கான நந்தி விருது பெற்றிருக்கிறாராம். அதனால் தொடர்ந்து படத்துக்குப்படம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை கைப்பற்ற வேண்டும் என்ற கனவுகளுடன் தற்போது கதாநாயகியாக என்ட்ரி கொடுத்திருக்கிறாராம் நித்யா ஷெட்டி.


மேலும்,. ஐவராட்டம் படத்தில் நடிததது பற்றி அவர் கூறும்போது, தமிழில் முதல் படத்திலேயே படம் முழுக்க பாவாடை தாவணி காஸ்டியூம் அணிந்து நடித்திருக்கிறேன். அதேசமயம் என்னை வெறும் டூயட் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தாமல், நான் நடிப்பதற்கு நிறைய காட்சிகள் தந்திருக்கிறார்கள். அதனால் தமிழில் முதல் படமே எனக்கு சவாலாகவே இருந்தது என்று சொல்லும் நித்யா ஷெட்டி, இந்த படத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல காட்சிகளில் நடித்துள்ளாராம். அந்த அளவுக்கு நடிப்பு என்றால் வெறித்தனமாக களமிறங்கி விடுவாராம் அவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)