விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது தன்னுடைய க்ளவுட் நைன் பேனரில் அஜித் நடித்த மங்காத்தா உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்தார் அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரி. படத்தயாரிப்பில் ஈடுபட்டதோடு பையா, வானம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களை வாங்கியும் வெளியிட்டார். அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தன்னுடைய பேனரில் படம் தயாரிப்பதை நிறுத்தியவர், முன்னணி இயக்குநரின் பட நிறுவனத்தில் முதலீடு செய்து ரகசியமாக லாபம் பார்த்து வருவதாக தகவல் உண்டு. அதுமட்டுமல்ல, தன்னுடன் நெருக்கமாக இருந்த நண்பர்களுக்கு தாராளமாக பண உதவி செய்து அவர்களது பெயரிலேயே படங்களைத் தயாரிக்கிறார் என்றும் படத்துறையில் பேசப்பட்டு வருகிறது.
இந்த தகவலை உண்மையாக்குவதுபோல் புதிய படத்தை க்ளவுட் நைன் நிறுவனத்தைச் சேர்ந்த சுஷாந்த் தயாரிக்கிறார். ஜெய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, உதயம் என்எச்4, பொறியாளன் படங்களை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார். வெற்றிமாறனின் உதவியாளரார் இவர். ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக இவன் வேற மாதிரி பட புகழ் சுரபி நடிக்கிறார். ஏற்கெனவே, பொடியன் என்ற பெயரில் மணிமாறன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்த படம் ட்ராப்பாகிவிட்டதால், தற்போது ஜெய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்!