சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |
உடல்நலக் குறைவால் நடிகரும், இசைகலைஞருமான மீசை முருகேசன் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முருகேசன், நவ 3ம் தேதி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் இரத்தம் உறைந்திருப்பதை கண்டறிந்தனர், மேலும் சர்க்கரை நோய், இரத்தம் அழுத்தம் ஆகியவையும் அதிகமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது, இதனையடுத்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார் முருகேசன். தொடர்ந்து அவரது குடும்பத்தார் அவரை கவனித்து வந்தநிலையில், இன்று(நவ 8-ம் தேதி) மாலை 4.05 மணியளவில், அவரது உயிர் பிரிந்தது.
கோவை மாவட்டம், இடிகரையில், தவில் வித்வான் சுப்ரமணிய முதலியார் - பொன்னம்மாள் தம்பதிகளின் மகனாக, 13-01-1930-ம் ஆண்டு பிறந்தவர் ஐ.எஸ்.முருகேஷ் எனும் மீசை முருகேசன். தந்தையை போலவே இவரும் இசையில் ஆர்வம் மிக்கவர். இவர் வாசிக்காத இசை கருவிகளே கிடையாது. குறிப்பாக கொட்டாங்குச்சியில் இசை வாசிப்பதில் இவர் மிகப்பிரபலம். கே.பி.சுந்தரம்மாள், தியாகராஜா பாகவதர், டி.எம்.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான இசை மேதைகளிடம் பணியாற்றி இருக்கிறார். தமிழகம் தவிர்த்து உலகநாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.
இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வம் மிக்கவர். ஆண்பாவம், பூவே உனக்காக உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் மீசை முருகேசன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். கலைத்துறையில் இவரது சேவையை பாராட்டி தமிழக அரசு, இவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. மறைந்த முருகேஷ்க்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், 2 பெண் மற்றும் 2 ஆண் வாரிகள் உள்ளனர், இதில் ஒரு ஆண் வாரிசு இறந்துவிட்டார். முருகேஷின் உடல் சென்னை, வடபழனியில் உள்ள குமரன் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிசடங்குகள் ஞாயிற்றுகிழமை(நாளை நவ 9ம் தேதி) அன்று நடைபெறுகிறது.