Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் 'ஐ' - ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!

03 நவ, 2014 - 04:54 IST
எழுத்தின் அளவு:

ஐ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்... உள்ளிட்ட பலர். இப்படி மொத்த பிரமாண்டங்கள் இணைந்து ஒரு படத்தை செதுக்கி செதுக்கி எடுகின்றனர் என்றால் சும்மாவா...! ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அர்னால்ட் வரை கொண்டு வந்த பெருமை தமிழ் சினிமாவுக்கே சேரும். எப்படி இத்தனை வருடங்கள் பணத்தை போட்டு இன்னும் 'ஐ' படம் வெளி வர முடியாமல் தாக்கு பிடிக்கிறீர்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்டால்...


ஒரு நிமிடம் அமதியாக இருந்தவர்... ஐ படத்தில் இடம்பெற்றுள்ள ''மெர்சலாயிட்டேன்...'' என்ற பாடலை போட்டு காட்டினார். உண்மையாகவே அந்தப்பாட்டை பார்த்துவிட்டு மெர்சலாகிவிட்டோம். அந்தளவுக்கு அந்த ஒருபாட்டு மட்டும் இருக்கிறது. விக்ரம்-எமி ஆடிப்பாடும் காட்சிகளில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தி எடுத்துள்ளனர். உதாரணமாக எமி ஜாக்சன், மீன் போன்றும், டச் போன் போன்றும், மோட்டார் சைக்கிள் போன்றும் உருமாறும் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே நிச்சயம் மெர்சலாவார்கள். ஐ படத்தின் கிராபிக்ஸ் பணிக்காக சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐதராபாத், மும்பை மற்றும் சென்னையை சேர்ந்த கிராபிக்ஸ் டிசைனர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குனர் உட்பட அனைவரும் தீவிரமாக உழைக்கின்றனர். அவசரப்பட்டு நான் ரிலிஸ் செய்வது சரியா இருக்காது, பணத்துக்காக என்றால் எப்போதோ வெளியிட்டு இருப்பேன். நான் மிகப்பெரிய சினிமா ரசிகன், என்னைப்போல் இன்னும் நூறாயிரம் பேர் தமிழ் சினிமாவை ரசிக்க வேண்டும். ஐ படத்தில் அனைவரது உழைப்பும் இருக்கிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளேன். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன், நூறு வருட தமிழ் சினிமாவை ஐ என்ற ஒரு படம் பேச வைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.


விரைவில் 'ஐ' படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்களாகிய உங்களை வந்து சேர இருக்கிறது. அதுவரை காத்திருங்கள்...!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)