அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன மோகன்லால் மகள் | கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா | வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க தேடிவந்த 16 படங்களை மறுத்தேன்; நடிகை சோனா ஹைடன் | துரந்தர் படம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் : ஆதித்யா தர் | அரசன் படத்தில் இணைந்த விக்ராந்த் | ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள் : ரவி மோகன் பதிவு வைரல் | ஜனநாயகனுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்: பணத்தை திரும்பி கேட்கிறார்களா? | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'துரந்தர் 2' டிரைலர் | போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை | தமிழில் நடிக்கும் குஷி ரவி |
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார். வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றாலும் மிகச் சிறந்த ஆன்மீகவாதி, பக்திமான், வாழ்க்கையில் சீரிய நெறிமுறைகளை கடைப்பிடித்தவர். அவர் பல ஆண்டுகளாக ராசியான வைர மோதிரம் ஒன்றை அணிந்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அதை அவர் கழற்றுவதே இல்லை. அவரது மரணத்திற்கு பிறகு அந்த மோதிரத்தை அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். இப்போது அந்த மோதிரம் உள்பட நம்பியார் வீட்டில் இருந்த 5 ஜோடி வைர கம்மல்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு அறிந்த யாரோ அதனை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.
கோபாலபுரம் பங்களா
நடிகர் நம்பியார் தனது கடைசிகாலம் வரை தனது கோபாலபுரம் பங்களாவில் வசித்து வந்தார். அதன் பிறகு அவரது மகன் சுகுமாறன் நம்பியார் அந்த பங்களாவில் வசித்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த பங்களா இடிக்கப்பட்டு அங்கு பல அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு அருகில் நம்பியாருக்கு சொந்தமான கெஸ்ட் அவுசில் அவரது மகள் வசித்து வருகிறார். அங்குதான் இந்த கொள்ளை நடந்துள்ளது.
வேலைக்காரி மீது சந்தேகம்
அந்த வீட்டில் பல ஆண்டுகள் வேலைபார்த்து வந்த வேலைக்காரி கடந்த 10 நாட்களுக்கு முன் வேலையை விட்டு நின்று விட்டார். அவருக்கு வைர நகைகள் பற்றித் தெரியும், அவரோ, அவர் தகவல் கொடுத்தோ நகைகள் திருட்டு போயிருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
புகார் இல்லை. நகைகள் திருட்டு போனதாக போலீசுக்கு தகவல் வந்தாலும் எழுத்துபூர்வமான புகார் எதையும் யாரும் கொடுக்கவில்லை. என்றாலும் ராயப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.