Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரக்கு அடிக்கும் பழக்கமே கிடையாது! -ரசிகர்களிடம் ஸ்ரீதிவ்யா பதில்!!

05 அக், 2014 - 11:36 IST
எழுத்தின் அளவு:

விதார்த் நடித்து இன்னும் வெளிவராமல் இருக்கும் காட்டுமல்லி படத்துக்காக ஆந்திராவில் இருந்து தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளிவந்து ஹிட்டாகியது.

அதனால் கோலிவுட்டின் ராசியான ஹீரோயினி என்பதோடு பட்ஜெட் நாயகி என்று அவரை மளமளவென்று சில படங்களுக்கும் புக் பண்ணினர். அந்த வகையில், பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, ஜீவா, வெள்ளைக்கார துரை என பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்தார். அதில் ஜீவா மட்டும் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. இந்த படம் ஹிட்டடித்திருப்பதால் ஸ்ரீதிவ்யாவின் ரேட்டிங் மேலும் எகிறி நிற்கிறது. அதோடு அடுத்தடுத்து அவரை புக் பண்ணுவதற்கும் பட அதிபர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.


இந்தநிலையில், ஜீவா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் ஸ்ரீதிவ்யா. அப்படி சமீபத்தில் ஒரு சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார் ஸ்ரீதிவ்யா. அப்போது சரக்கு அடித்து விட்டு உளறுவது போல் ஸ்ரீதிவ்யாவை நடிக்க சொன்னபோது, அவர் அப்படியே அசத்தலாக நடித்தார்.


ஆனால் அதைப்பார்த்து விட்டு சில ரசிகர்கள், பல ஆண்டுகளாக சரக்கு அடிக்கிற பழக்கம் இருப்பவரைப் போலவே அசத்தலாக நடித்தீர்களே.உங்களுக்கு எவ்வளவு நாட்களாக சரக்கு அடிக்கிற பழக்கம் உள்ளது? என்று கேட்டார்களாம். அதைக்கேட்டு ஆடிப்போன ஸ்ரீதிவ்யா, நிஜத்தில் எனக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாது. அந்த நிகழ்ச்சியில் என்னை தண்ணி அடித்தவர் போல் நடிக்கச்சொன்னதால் அப்படி நடித்தேன். அதனால் அதை உண்மை என்று யாரும் நம்ப வேண்டாம். மேலும், சரக்கு அடித்ததில்லை என்றாலும், எத்தனையோ பேர் தண்ணி அடித்து விட்டு பேசுவதை பார்த்திருக்கிறேன். அதை உள்வாங்கித்தான் அப்படி நடித்துக்காட்டினேன் என்றும் தன்னை வெறுப்பேற்றிய ரசிகர்களுக்கு பொறுமையாக பதில் கொடுத்துள்ளார் ஸ்ரீதிவ்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)