15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை | சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு? | டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர் | 'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு | ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி | அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன் | டாக்டர் ராஜசேகருக்கு 'கம்பேக்' கொடுத்த 'பைக்கர்' | மழையால் 'எல்ஐகே' விழா தள்ளி வைப்பு | விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன் | ‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார் |
ராதாபாரதி இயக்கி வரும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம். ஜெய்நாத், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கிறார். குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்டான ஸ்ரீகாந்த் தேவா, ஒரு குத்துப்பாட்டுக்கு மெட்டுப்போட்டு அதில் ஆடவும் செய்திருக்கிறார்.
இதுகுறித்து ராதாபாரதி கூறியதாவது: இது காமெடி கலந்த காதல் படம். திருக்கோடியூர் கிராமத்தில் ஒரு குத்துப்பாட்டை படமாக்கினோம். கோவில் திருவிழாவில் இளைஞர்கள் ஆடிப்பாடுவது மாதிரியான பாட்டு. "கட்டழகி சின்ன பொட்டழகி உன்னை பார்த்தலே பலம் கூடுமடி..." என்ற இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா ஆடினார் அவருடன் நாயகன் ஜெய்நாத், வைபவி என்ற டான்சரும் ஆடியிருக்கிறார்கள். இந்த பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்" என்றார் ராதாபாரதி.