தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஏறத்தாழ 700 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் காமெடி நடிகர் குண்டு கல்யாணம் இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது ஏற்கனவே தெரிந்த சங்கதிதான். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான குண்டுகல்யாணம் இயக்கும் படத்தின் தலைப்பு நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி. குழந்தைகளை குஷி படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் இப்படத்தில் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான நல்ல கருத்துக்களும் அடங்கியிருக்கிறதாம். காட்டுக்குள் சுற்றுலா போகும் குழந்தைகள் அங்கே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் விறுவிறுப்பான நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி படத்தின் கதை. படத்தில் குண்டுகல்யாணத்தின் மகள் ஜனனி முக்கிய கேரக்டரில் நடிப்பதுடன், அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் பணியாற்றுகிறார். சத்யமங்கலம், மேட்டூர் காடுகளில் பாதுகாப்பான ஏரியாவில்தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். சூட்டிங் ஸ்பாட்டில் துருதுருவென படத்தில் நடிக்கப்போகும் வாண்டுகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் குண்டுகல்யாணம், படத்தில் வன அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். குண்டு கல்யாணம் இயக்கும் இன்னொரு படமான நாங்க புதுசா படத்தின் மியூசிக் கம்போசிங் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.