ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
ஆட்டோகிராப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கோபிகா. கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன் உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கோபிகா, மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டார். அவருடைய கணவர் அகிலேஷ் அயர்லாந்தில் டாக்டராக இருக்கிறார். 2008ம் ஆண்டு ஜூலை 27ம்தேதி இவர்கள் திருமணம் கேரளாவில் நடந்தது. திருமணத்துக்கு பின் கோபிகா, கணவருடன் அயர்லாந்தில் குடியேறினார். திருமணத்துக்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் 2 மலையாள படங்களில் நடித்தார். அதன் பின்னர் கர்ப்பமானதால் அயர்லாந்துக்கே சென்று விட்டார்.
இந்நிலையில் கோபிகாவுக்கு அயர்லாந்தில் கணவர் அகிலேஷ் பணிபுரியும் மருத்துவமனையிலேயே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக கோபிகாவின் கணவர் டாக்டர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.