நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே முதல்வரிசை நடிகராகிவிட்டார் சிவகார்த்திகேயன். மனம் கொத்தி பறவை தொடங்கி மான் கராத்தே வரை அவர் கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியடைந்து வருகின்றன. விளைவு...கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன். திரையுலகில் மட்டுமல்ல விளம்பரப்படத்துறையிலும் சிவகார்த்திகேயனுக்கு செம டிமாண்ட். பிரபலமான ஜவுளிக்கடையின் விளம்பரப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை அண்மையில் அணுகியது விளம்பரப்பட நிறுவனம். முதலில் மறுத்த சிவகார்த்திகேயன், அவர்கள் சொன்ன சம்பளத்தைக் கேட்டதும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டுவிட்டார். எவ்வளவு சம்பளமாம்? 3 படப்பிடிப்புக்கு 1 கோடி சம்பளம்.
அம்மாடியோவ்..!