ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
சின்னத்திரையின் தெனாவெட்டான நடிகை தேவிபிரியா. பரபரப்பு செய்திகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தற்போது ரோமாபுரிப் பாண்டியன் தொடரில் அரசவைப்புலவரின் மகளாகவும், தளபதியின் காதலியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சேலை கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்ண வண்ண உடைகள், உடல் முழுக்க நகைகள் அணிந்து நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நிஜத்தில்தான் மன்னர் குடும்பத்தில் பிறக்க வில்லை அப்படி நடிக்கவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என்ற சந்தோஷம்தான் அது. தொடரில் எனக்கு மிக முக்கியமான கேரக்டர்.
பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் தொடர்ந்து பகை. இருநாட்டின் உறவுக்காக இந்திர விழா நடக்கிறது. அந்த விழாவில் பாண்டிய நாட்டு தளபதி செழியன் கடத்தப்படுகிறார். இதனால் முன்னை விட பகை அதிகமாகி விடுமோ என்கிற பதட்டம் நிலவுகிறது. சோழ நாட்டு அரசவை புலவன் காரிகண்ணனாரின் மகளான நான் ஆண் வேடமணிந்து செழியனை மீட்கச் செல்கிறேன். செழியனை மீட்டு இரு நாட்டு பகையை எப்படி போக்குகிறேன் என்பது என் பகுதி கதை. அதில் செழியனோடு காதலும் கொண்டு விடுகிறேன். நான் நடிக்கும் இந்தப் பகுதி பரபரப்பாக போகும். என்கிறார் தேவிபிரியா.