நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |
இனி கிளாமராக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நடிகை மோனிகா. அழகி படத்தில் பாவாடை தாவணியில் அழகுப் பதுமையாக வந்து அசத்திய மோனிகா, சிலந்தி படத்தில் படுகவர்ச்சியாக வந்து கலக்கினார். குளியல் காட்சியில் தொடங்கி பெட்ரூம் காட்சி வரைக்கும் நெருக்கமாகவும், கிறக்கமாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இதையடுத்து நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த மோனிகாவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒன்றிரண்டு படங்களில் வந்த வாய்ப்பும் ஓவர் கவர்ச்சிக்காகத்தான். கவர்ச்சி நடிகை என்ற முத்திரை விழுந்து விடக்கூடாது என்பதால் அந்த வாய்ப்புகளையெல்லாம் மறுத்த மோனிகா, தற்போது வர்ணம் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் ரொம்பவே டீசன்ட்டாக நடித்திருக்கிறாராம். அதேநேரம் இனி ஒருபோதும் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.




