ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
கதாசிரியர்கள் சுபா, தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா,ராணா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ஆரம்பம் திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின்ஆரம்பம் பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துக் கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சதிரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது, அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது, அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.
அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.
படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது. நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை.
எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்படுகிறது.. ஏராளமான பொருட் செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.