டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |
தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி ஒரு ஈயை கதாநாயகனாக வைத்து இயக்கிய படம் நான் ஈ. இந்த படத்தில் நானி-சமந்தா ஜோடியாக நடிக்க, கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடித்திருந்தார். கதாநாயகனான ஈக்கும்- வில்லனுக்கும் நடைபெறும் கதை என்பதால், படம் முழுக்க சுதீப் டிராவலாகியிருந்தார். அதோடு, அவரது நடிப்பும் பேசும்படியாக இருந்ததால் அந்த ஒரே படத்தோடு தென்னிந்தியா முழுக்க பாப்புலர் நடிகராகி விட்டார் சுதீப்.
இருப்பினும் கன்னடத்தில் பல படங்கள் கைவசம் இருந்ததால் மீண்டும் தமிழ், தெலுங்கில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது பாகுபாலி என்ற சரித்திர படத்தை இயக்கி வரும் நான் ஈ இயக்குனர் ராஜமவுலி அப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க சுதீப்பை அழைத்துள்ளாராம். ஏற்கனவே இதே படத்தில் பிரபாஷ், அனுஷ்கா, ராணா, ரம்யாகிருஷ்ணன் என பல பிரபலங்கள் இருந்தபோதிலும், சுதீப் தனது பேவரிட் நடிகர் என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தை அவருக்கு கொடுத்துள்ளாராம் ராஜமவுலி.
அதனால் ஏற்கனவே தான் நடித்து கால்சீட் கொடுத்திருந்த இரண்டு கம்பெனிகளிடம் பேசி, அந்த கால்சீட்டை பாகுபாலி படத்துக்கு கொடுத்து நடிக்கத்தயாராகி வருகிறாராம் சுதீப். ஆனால், சுதீப்பின் வருகை தங்களது கேரக்டரை பதம் பார்த்து விடுமோ என்று அப்படத்தில் நடித்து வரும் ஏனைய நடிகர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம்.