Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு'

26 பிப், 2026 - 03:00 IST
எழுத்தின் அளவு:
That-was-last-month,-this-is-this-month…Vijay-fans-rant
Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் இடையில் போட்டி, பொறாமை இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால், அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டபடி சண்டை போட்டுக் கொள்வார்கள்.

சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் ஆகியோருக்கு இடையில்தான் இப்படியான சண்டை அதிகமாக இருந்தது. ஆனால், விஜய் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவரது ரசிகர்கள் மாறுவார்கள் என்று பார்த்தால் இன்னும் மாறவில்லை.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் ஜனவரி 14ல் வெளியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் முன்னதாக வெளியிட முடிவெடுத்து ஜனவரி 10ம் தேதிக்கு மாற்றினார்கள். இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது. 'பராசக்தி' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக எழுத ஆரம்பித்தார்கள்.

'ஜனநாயகன்' நீதிமன்ற விவகாரத்தால் வராமல் போகவே அந்தப் கோபம் அதிகமாக ஆரம்பித்தது. சிவகார்த்திகேயனையும், படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவையும் கடும் சொற்களால் விமர்சித்தார்கள். அது படத்தின் வரவேற்பையும் பாதித்தது.

இந்நிலையில் நாளை வெளியாக உள்ள சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் 'தாய் கிழவி' படத்தில் விஜய்யின் தவெக கட்சி பற்றி ஒரு வசனம் இடம் பெற்றிருக்கிறது. அது டிரைலரிலும் வந்துள்ளது. தங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி என ராதிகாவின் மூத்த மகன் சிங்கம்புலி பேசும் போது அவரது தம்பி பாலசரவணன், “விஜய் கட்சி, தவெக” என சொல்லுவார்.

நேற்று நடைபெற்ற பிரிமியர் காட்சியில் அந்த வசனம் படத்தில் வரும் போது விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கைதட்டி ரசிக்கிறார்கள். போன மாசம் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள் இந்த மாசம் வாழ்த்த ஆரம்பித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'சரோஜா' படத்தில் தவறு… இப்போது கண்டுபிடித்த ரசிகர்'சரோஜா' படத்தில் தவறு… இப்போது ... 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சசிக்குமார் திருப்பூர் பராசக்தி திமுகவின் ஜால்ரா கதை(உண்மை அல்ல) இப்போது எதிரி திமுக தவேக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap