Advertisement

சிறப்புச்செய்திகள்

கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மவுன படமான “காந்தி டாக்ஸ்” டிரைலர் வெளியீடு

27 ஜன, 2026 - 05:35 IST
எழுத்தின் அளவு:
Trailer-of-silent-film-“Gandhi-Talks”-released
Advertisement

ஜீ ஸ்டுடியோஸ் உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “காந்தி டாக்ஸ்”. விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கி உள்ளார். கமலின் பேசும் படம் போன்று வசனங்கள் இல்லாமல் மவுன படமாக இது உருவாகி உள்ளது.

ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மவுனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றை படத்தின் டிரைலர் பிரதிபலிக்கிறது. அதற்கு ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை பக்கபலமாய் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி கூறுகையில், “வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை 'காந்தி டாக்ஸ்' எனக்கு அளித்தது. மவுனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது” என்றார்.

அரவிந்த்சாமி கூறுகையில், “சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மவுனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை 'காந்தி டாக்ஸ்' நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது” என்றார்.

அதிதி ராவ் கூறியதாவது, “வார்த்தைகளை விட உணர்வுகள் தான் இதில் என்னை அதிகம் நெகிழ வைத்தது. மவுனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது” என்றார்.

வரும் ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' முதல் பார்வை வெளியீடுசித்தார்த்தின் ‛ரவுடி அண்ட் கோ' ... முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை : ராஷ்மிகா முகம் தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap