என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், தூய தமிழ் உச்சரிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பசுபுலேட்டி கண்ணாம்பா. 'கிருஷ்ணன் தூது' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், 1942-ல் வெளியான 'கண்ணகி' படத்தில் கண்ணகியாக நடித்துப் புகழ் பெற்றவர். தமிழ், தெலுங்கில் 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பி.கண்ணாம்பா, 25 படங்களைத் தமிழ், தெலுங்கில் தயாரித்தும் இருக்கிறார்.
அவர் தயாரித்த படங்களில் ஒன்று, 'லக்ஷ்மி'. வில்லனாக நடித்து வந்த ஆர்.எஸ்.மனோகர், இதில் ஹீரோ. மனோகர் ஒரு சில படங்களிலேயே நாயகனாக நடித்துள்ளார். அதில் இந்த படம் முக்கியமானது. எல்.நாராயணராவ், சி.வி.வி.பந்துலு, எம்.சரோஜா, சந்திரபாபு, டி.ஆர்.ராமச்சந்திரன், சி.கே.சரஸ்வதி உட்பட பலர் நடித்தனர். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம் இயக்கினார் . 1953ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெறவில்லை.