ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த 2009ம் ஆண்டில் தெலுங்கில் கொடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து வெளியான படம் 'அருந்ததி'. அந்த காலகட்டத்தில் குறைவான பொருட்செலவில் உருவாகி பல மடங்கு வசூலை வாரி குவித்த படம். அந்த சமயத்தில் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தை ஹிந்தியில் மோகன் ராஜா இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கவுள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.