என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் புகழ்பெற்ற நம்பியார் கதாநாயகனாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 1950களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நம்பியார் முதன்முதலாக நாயகனாக நடித்த படம் 'கல்யாணி'. பிரபல ஹாலிவுட் படமான ஸ்னேக் பிட் (1948), என்ற படத்தை தழுவி மாடர்ன் தியேட்டர் சுந்தரம் இதனை தயாரித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், அவர் மூலம் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்கிறார் அவரை எப்படி குணப்படுத்துகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த ஹாலிவுட் படம், ஐந்து ஆஸ்கர் விருதுகளை பெற்றது. நாயகியாக நடித்த ஒலிவியா டி ஹேவிலாண்ட் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
தமிழில் நம்பியார் மனநலம் பாதித்த கணவராகவும், விஎஸ் சரோஜா மனைவியாகவும் நடித்தனர். எஸ். தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் இசை அமைத்தனர். ஆச்சார்யா படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே ஆச்சாரியா இறந்துவிட்டதால் மீதி படத்தை ஒளிப்பதிவாளர் மஸ்தான் இயக்கினார். 'அத்தைந்தி காபுரம்' (மாமியார் வீட்டில் வாழ்க்கை) என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது இரு மொழிகளிலும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.