நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75, சென்னையில் காலமானார். இன்று(மே 29) காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தவர் ராஜேஷ். பள்ளி ஆசிரியர் பணியை துறந்து அரிதாரம் பூசி சினிமாவில் நடித்தார். 1974ல் கே.பாலசந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை" என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். வெள்ளித்திரையில் அறிமுகமான முதல் படம் இதுவாகும். கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இவரது மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே இறந்துவிட்டார். திவ்யா, தீபக் என்ற ஒரு மகளும், மகனும் உள்ளனர். ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் மகள் அமெரிக்காவில் உள்ளார். அவர் சென்னை வந்ததும் இறுதிச்சடங்கு பணிகள் நடக்கும். இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




