அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிக்கும் 'பறந்து போ' படத்தை ராம் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதுகுறித்து இயக்குனர் ராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4ம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. சூரியகாந்தி பூந்தோட்டத்தை பின்னணியாக கொண்ட பாடல் இது.
ஒரு அப்பாவின் பால்யமும் மகனின் பால்யமும் ஒன்று சேருகிற பாடல். மதன் கார்க்கியின் வரிகளில், விஜய் யேசுதாஸ் பாட, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்திருக்கிறார். ஜூலை 4 “பறந்து போ” திரையரங்குகளில் வெளியாகும் சமயத்தில் ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும். சூரியகாந்தி பூக்களோடு “பறந்து போ” திரைப்படம் பார்க்க வாருங்கள். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ், மற்றும் சில குட்டிபிசாசுகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்துள்ளது. முதலில் ஓடிடியில் வெளியாவதாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதால் தற்போது தியேட்டரில் முதலில் வெளியிட தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.