ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைப். திரிஷா, அபிராமி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் ஜோசப் என்கிற படத்தின் மூலம் பிரபலமானாலும் தமிழில் ஜகமே தந்திரம் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். கடந்த வருடம் மலையாளத்தில் இவர் இயக்கி நடித்த பணி என்கிற படத்தில் இவரின் நடிப்பு மற்றும் டைரக்ஷன் ஆகியவை ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் தான் தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜோஜூ ஜார்ஜ் குறித்து கமல் பேசும்போது, “எனக்கு இவரைப் பற்றி அவ்வளவாக யார் என்று தெரியாது. ஆனால் சிலர் இவர் நடித்த இரட்ட என்கிற படத்தை பார்க்கும்படி எனக்கு கூறினார்கள். அந்தப்படத்தில் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் இரண்டு கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் எளிதாக வேறுபடுத்தி கண்டுபிடிக்கும் விதமாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பார்க்கும்போதே எனக்கு பொறாமையாக இருந்தது” என்று பேசினார்.
கமல், தன்னை புகழ்ந்து பேசுவதை கேட்டு கண்கலங்கினார் ஜோஜூ ஜார்ஜ். இந்த விழாவில் மட்டுமல்ல சமீபத்திய பேட்டிகளில் எல்லாமே ஜோஜூ ஜார்ஜ் நடிப்பு குறித்து கமல்ஹாசன் புகழ்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.