கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
கடந்த 2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என மொழிக்கு ஒரு பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதேசமயம் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன் ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய ரஜினிகாந்த், முதலில் இந்த படத்திற்கு வில்லனாக நடிக்க வேறு ஒரு பிரபல ஹீரோவை அழைத்ததாகவும் அவர் தனது நண்பர் தான் என்றாலும் பின்னர் இருவரும் இணைந்து நடித்தால் சில சங்கடங்கள் இருப்பதை இருவருமே உணர்ந்ததால் அவருக்கு பதிலாக தான் விநாயகனை தேர்வு செய்ததாகவும் கூறியிருந்தார்.
அப்போது அவர் பெயரை குறிப்பிடாமல் கூறியதால், அது ரஜினியின் நண்பரான சிரஞ்சீவியாக இருக்கலாம் என்றும் மம்முட்டியாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் யூகம் செய்தனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்த வசந்த் ரவி சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் மம்முட்டி தான் என்கிற தகவலை கூறியுள்ளார். மம்முட்டியே நடித்திருந்தாலும் கூட விநாயகனை போல அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் ரசிகர்கள்.