2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கமர்ஷியல் படங்களில் அந்தக் காலத்திலேயே பல புதுமைகைளை புகுத்திய முன்னோடி பி.யு.சின்னப்பா. முதன் முதலாக 'உத்தமபுத்திரன்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் 9 வேடங்களில் ஒரே பிரேமில் தோன்றினார். இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.
இந்த வரிசையில் அவர் அப்பா, மகன், பேரன் என 3 வேடங்களில் நடித்த படம் 'மங்கையர்கரசி'. இந்த படத்தை மேற்கு வங்க இயக்குனர் ஜிதின் பட்டர்ஜி இயக்கினார். சின்னப்பா ஜோடியாக கண்ணாம்பா டைட்டில் கேரக்டரில் நடித்தார். இவர்களுடன் அஞ்சலி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஜி.ராமநாதன், குன்னக்குடி வைத்தியநாத அய்யர், சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோர் இசை அமைத்திருந்தனர். பாக்யா பிக்சர்ஸ் சார்பில் நாகூர் அஹமது தயாரித்திருந்தார். இந்த படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.