50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் |

புதுமுகங்கள் இணைந்து கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கி உள்ள படம் 'மனிதர்கள்'. ராமு இந்திரா இயக்கி உள்ளார். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர், அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மலையாள இசை அமைப்பளார் அனிலேஷ் எல் மேத்யூ தமிழில் அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் ராமு இந்திரா கூறும்போது, "எளிய மனிதர்களை வைத்து ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரில்லர் படமாக உருவாகி உள்ளது. 6 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். அப்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்று நேருகிறது. அவர்களுக்கு என்ன ஆனது, அதிலிருந்து மீண்டார்களா என்பதுதான் படத்தின் கதை. காலமும், சூழலும் மனிதர்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதை உணர்த்தும் படமாக இருக்கும். கதைக்கு தேவைப்படாததால் படத்தில் பெண் கதாபாத்திரம் இல்லை" என்றார்.