தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில் ரோபோ சங்கரும் ‛அம்பி' படத்தின் மூலம் ஹீரோ ஆகியுள்ளார். இந்த படத்தில் பாடல் காட்சி இருக்கிறதா? பைட் இருக்கிறதா என்ற கேள்விக்கு ரோபோ சங்கர் அளித்த பதில் ''ஆம் இருக்கிறது. குறிப்பாக, சண்டைக்காட்சிக்கு முன்பே தயார் ஆனேன். நிறைய ரிகர்சல் பார்த்து 3 சண்டைகாட்சி எடுத்தோம். இந்த படத்தில் ஹீரோவாக நடிங்கனு என்னிடம் இயக்குனர் கேட்கவில்லை. கதையை சொன்னார். 40 வயதுக்கு ஏற்க கதாபாத்திரம் என்பதால் நீங்களே நடிக்கலாம் என்று நானே முடிவெடுத்தேன். கதையை கேட்டு நடிக்க தயார் ஆனேன். நான் இளம் வயதில் தாத்தா ஆகிவிட்டேன். அது இறைவன் கொடுத்த வரம். என் குடும்பத்துடன், என் பேரனுடன் செலவழிக்கிற நேரம் பொன்னானது. எதை பார்த்தாலும் பயப்படும் சாதுவான அம்பி செய்யக்கூடிய சில செயல்கள் எதிர்தரப்புக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற ரீதியில் படம் செல்கிறது.