'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

உலகெங்கிலும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவர்களைப் போலவே தத்ரூபமாக மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு வருகின்றன. அப்படி தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரின் மெழுகு சிலைகள் ஏற்கனவே இப்படி மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன.
அந்த வகையில் தற்போது ராம்சரணின் மெழுகு சிலையும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வரும் மே ஒன்பதாம் தேதி மாலை 6:15 மணிக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகுசிலை திறந்து வைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்திற்கு அது கொண்டு சென்று வைக்கப்பட இருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ராம்சரணுடன் செல்லமாக தான் வளர்த்து வருகின்ற ரைம் என்கிற நாய்க்குட்டியையும் அவர் தனது கைகளில் வைத்திருப்பது போல சேர்த்து மெழுகு சிலையாக வடித்து உள்ளார்களாம். இதற்கு முன்னதாக இரண்டாம் ராணி எலிசபெத் தனது செல்லப்பிராணியான கார்கியை தன் கைகளில் வைத்திருப்பது போன்ற சிலை இடம்பெற்றிருந்தது. அவருக்குத்தான் முதன் முதலில் இப்படி ஒரு மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டதாம். அதற்கு அடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக, உலக அளவில் இரண்டாவதாக இந்தப் பெருமை ராம்சரணுக்கும் அவரது செல்லப்பிராணிக்கும்தான் கிடைத்துள்ளதாம்.




