ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா |

பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு மும்பை மன்னாட்டில் மிகப் பிரம்மாண்டமான வீடு உள்ளது. ஆனால் அவர் இந்த வீட்டை சீரமைப்பதற்காக நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தார். அந்த வகையில் வரும் மே மாதம் முதல் மராமத்து பணிகள் துவங்க இருக்கின்றன. இதனை தொடர்ந்து தற்போது பாந்த்ரா பகுதியில் உள்ள புதிய அபார்ட்மெண்ட் ஒன்றுக்கு குடிபெயர்ந்துள்ளார் ஷாருக்கான்.
இந்த அப்பார்ட்மெண்டில் நான்கு தளங்களை மொத்தமாக ஷாருக்கான் வாடகைக்கு எடுத்துள்ளார். நான்கு தளங்களுக்கும் சேர்த்து மாத வாடகை 24 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் தானும் தனது குடும்பமும் தவிர தனது பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகள் அனைவரும் தங்குவதற்கும் இந்த நான்கு தளங்களில் ஏற்பாடுகளை ஒதுக்கி கொடுத்துள்ளாராம் ஷாருக்கான்.