ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் “பாஸ் என்கிற பாஸ்கரன்”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில்” உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த படம் 'எங் மங் சங்'.
இதில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஸ்காந்த், பாகுபலி பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ரிஷ் இசை அமைத்தார்.
சில பிரச்னைகள் காரணமாக கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்த இந்த படத்தை தற்போது வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ள எஸ்.ஜே.அர்ஜூன்தான் இந்த படத்தை இயக்கியவர்.
17ம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு கதை அமைப்பில் தொடங்கி, 1980ல் நடக்கும் கதை, அப்போது அங்கு பிரபலமாக இருந்த குங்பூ கலையை, இந்தியாவில் இருந்து செல்லும் மூன்று இளைஞர்கள் அந்த கலையை கற்று, எங் மங் சங் என்ற பெயரோடு தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்கள். அங்கு கற்ற கலையை வைத்து இங்கு என்னென்ன செய்தார்கள் என்பதே இந்த படத்தின் திரைக்கதை.