நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் |
உலகப் புகழ் பெற்ற சினிமா விருதுகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள். அதில் இதுவரையில் 'ஸ்டன்ட் டிசைன்' பிரிவு சேர்க்கப்படவில்லை.
2029ம் ஆண்டு நடைபெற உள்ள 100வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அந்தப் பிரிவு சேர்க்கப்படுகிறது. இது குறித்து அவர்களது எக்ஸ் தளத்தில், “திரைப்படங்களின் மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக சண்டைக் காட்சிகள் எப்போதும் இருந்து வருகின்றன. இப்போது அவை ஆஸ்கர் விருதுகளின் ஒரு பகுதியாகும்.
ஸ்டன்ட் வடிவமைப்பில் சாதனை படைத்ததற்காக அகாடமி ஒரு புதிய வருடாந்திர விருதை உருவாக்கி உள்ளது. 2028ல் 100வது ஆஸ்கர் விருதுகளுடன் அது ஆரம்பமாகிறது. 2027ல் வெளியான படங்களில் இருந்து அது பெருமைப்படுத்தப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
திரைப்படங்களில் உயிரைப் பணயம் வைத்து பல சண்டைக் கலைஞர்கள் உருவாக்கும் இந்த 'ஸ்டன்ட் டிசைன்' பிரிவு ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களின் வரவற்பைப் பெற்றுள்ளது.