22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் சிவாஜி கணேசனின் அறிமுக திரைப்படமான “பராசக்தி'யின் நாயகியும், கன்னட நடிகர் ராஜ்குமாரின் அறிமுக திரைப்படமான “பேடர கண்ணப்பா” திரைப்படத்தின் நாயகியுமான நடிகை பண்டரிபாய் ஒரு தலைசிறந்த தென்னிந்திய திரை நட்சத்திரம். 1960 மற்றும் 70களில் தமிழில் வெளிவந்த முன்னணி நாயகர்களின் பெரும்பாலான திரைப்படங்களில் இடம் பெற்ற அன்பான 'அம்மா' கதாபாத்திரம் என்றால், அழைத்து வாருங்கள் பண்டரிபாயை என்ற நிலையே இருந்தது என்றால் அது மிகையன்று.
அந்த அளவிற்கு எம் ஜி ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிசந்திரன் என அன்றைய அனைத்து உச்ச நாயகர்களின் அம்மாவாகவே படங்களில் வாழ்ந்திருப்பார். “மன்னன்” திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான ஒரு திரைக் கலைஞராகவே அறியப்பட்டிருந்தார் நடிகை பண்டரிபாய்.
1949ம் ஆண்டு ஏவிஎம் தயாரித்த திரைப்படம் “வாழ்க்கை”. இரண்டு நாயகர்கள் இரண்டு நாயகிகள் நடித்திருந்த இத்திரைப்படத்தில் ஒரு நாயகனாக எஸ் வி சகஸ்ரநாமமும், மற்றொரு நாயகனாக டி ஆர் ராமச்சந்திரனும் நடித்திருக்க, எஸ் வி சகஸ்ரநாமத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை பண்டரிபாய். தமிழ் தெரியாத நடிகை பண்டரிபாய்க்கு 'ஆனா ஆவன்னா' சொல்லிக் கொடுத்து சலித்தே போயிருந்தார் அப்படத்தின் துணை நடிகரான பி டி சம்மந்தம்.
பின்னர் படத்தின் நாயகனான எஸ் வி சகஸ்ரநாமத்தையே பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுத் தர ஏற்பாடு செய்திருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். முழு முயற்சி எடுத்து இரண்டு மாதங்கள் தமிழ் கற்றுக் கொடுத்தும் நடிகை பண்டரிபாய்க்கு தமிழ் பேச வரவேயில்லை. நடிகை பண்டரிபாயை ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து வைத்திருந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், அவரிடம் அம்மா, நீ அடுத்த படத்தில் நடிக்கலாம் என்று கூற, கொடுத்தால் இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுங்கள் என அவர் மறுப்பு தெரிவிக்க, பின் ஒப்பந்தம் ரத்தானது.
அதன்பின் பண்டரிபாய் நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்தில் எம் எஸ் திரவுபதி என்ற நடிகையை நடிக்க வைத்து படமாக்கி வெளியிட்டார் ஏ வி மெய்யப்ப செட்டியார். படத்தின் மற்றொரு நாயகியாக அன்று 16 வயதே நிரம்பியிருந்த நாட்டியத் தாரகையான நடிகை வைஜெயந்திமாலாவை இப்படத்தின் மூலம் நாயகியாக்கியிருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். 1949ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று வெளிவந்த இத்திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது ஏ வி எம்மிற்கு.