இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய படங்கள் எதுவும் தேர்வாகவில்லை. ஆனால் லண்டனில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' என்ற படம் இறுதி சுற்றுக்கு தேர்வானது. இந்த படம் இங்கிலாந்து நாட்டின் சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது. தற்போது இந்த படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்தை இந்திய தணிக்கை வாரியம் படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்துள்ளது.
படத்தில் உள்ள கருத்துக்கள், காட்சிகள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் சில காட்சிகள், பல வசனங்களை நீக்கினால் மட்டுமே வெளியிட அனுமதி தரப்படும் என்று தணிக்கை வாரியம் கூறியது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்து விட்டது.
இதனால் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என்பது குறித்து படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம். கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.