டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமசிவன் பாத்திமா'. எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார்.
சுப்ரமணியபுரம் என்கிற இந்து கிராமத்திற்கும் யோக்கோபுரம் என்கிற கிறிஸ்துவ கிராமத்திற்கும் இடையிலான மோதல்தான் படம். இதில் புதுமை என்னவென்றால் இரு கிராம மக்களும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ மதத்திற்கு சென்றவர்கள், தாய் மதத்திலேயே இருப்பவர்களுக்கு இவர்களுக்கு இடையிலான மோதல்தான் திரைக்கதை.
இந்து கிராமத்தை சேர்ந்த விமலும், கிறிஸ்தவ கிராமத்தை சேர்ந்த சாயாதேவியும் காதலிக்க இதனால் ஊருக்குள் கலவரம் வெடிக்கிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பது கதை.
சர்ச்சைக்குரிய விஷயத்தை இந்தப் படம் பேசுவதால் சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரைலரில் வரும் காட்சிகளும் வசனங்களும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது திரைப்படம் தணிக்கை பிரச்னையில் சிக்கி இருக்கிறது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பல சர்ச்சைக்குரிய வசனங்களையும், காட்சிகளையும் நீக்க கூறி உள்ளனர். அவர்கள் சொல்லும் காட்சியை நீக்கினால் கதையின் போக்கிற்கு தடை ஏற்படும் என்று கருதிய படக்குழுவினர் படத்தை மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இன்னும் ஓரிரு நாட்களில் மும்பையில் தணிக்கை குழுவினர் படத்தை பார்க்கிறார்கள். மறு தணிக்கைக்கு பிறகு சான்றிதழ் பெற்று அதன் பிறகு வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.