அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் |
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன், சான்வே மேக்கனா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 24ம் தேதி வெளிவந்த படம் 'குடும்பஸ்தன்'. இப்படம் சுமார் 25 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.
படம் வெளியாகி 50 நாட்கள் வரை சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. படம் 50 நாளைக் கடந்ததை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதோடு அதற்கான விருதுகளையும் வழங்கியுள்ளனர். அது பற்றிய புகைப்படங்களை படத்தின் நாயகி சான்வே அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த 50க்கும் மேற்பட்ட படங்களில் 'குடும்பஸ்தன்' படம் மட்டும்தான் 50 நாட்களைக் கடந்த முதல் படமாக அமைந்துள்ளது. 25 நாட்களைக் கடந்த படங்களாக 'மத கஜ ராஜா, விடாமுயற்சி, டிராகன்' ஆகிய படங்கள் அமைந்துள்ளன.