ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? |

சில நடிகர்களோ, நடிகைகளோ மளமளவென சில படங்களில் நடிப்பார்கள், புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவில் இருந்து விலகி வேறு துறையின் பக்கம் சென்று விடுவார்கள். இன்றைய தலைமுறைக்கு தெரிந்தவர்களில் அரவிந்த்சாமியை குறிப்படலாம். மளமளவென வளர்ந்து வந்தவர் திடீரென சினிமாவிலிருந்து விலகி தொழிலதிபராகி விட்டார். இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.
இதுபோன்று அந்த காலத்தில் இருந்தவர் வரதன். 1947ம் ஆண்டு வெளிவந்த “கன்னிகா'' என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். இப்படத்தின் கதாநாயகி பிரபல நடிகை எம்.எஸ்.சரோஜினி. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னை, பிரபாத் டாக்கீஸில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஓடியது.
சென்னை, லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றவர் வரதன். நாட்டிய ஆர்வம் மிகுந்த இவர் சாஸ்திரீய முறைப்படி சங்கீதமும் பயின்றவர். நடிக்க வருமுன் சென்னை, பாரி கம்பெனியில் வேலை செய்தார். இயல்பிலேயே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் மேடைகளில் நடனமாடிக் கொண்டிருந்த லலிதா பத்மினியை முதன் முதலாக கன்னிகா படத்தில் ஆட வைத்து அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.
“பவளக்கொடி”யில் ரி.ஆர்.ராஜகுமாரியுடன் நடித்தார். “லாவண்யா” என்ற படத்தில் சூர்யபிரபாவுடன் நடித்தார். எல்லா படங்களுமே பெரும் வெற்றி பெற்றன. கடைசியாக 'உலகம்' என்ற படத்தில் நடித்தார். பெரிய நட்சத்திர பட்டாளங்ள் நடிக்க பெரிய பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத வரதன் அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. தொழிலதிபராக மாறினார்.