ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் |
நடிகர் ஆதி 3 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து வழக்கு தொடரப் போகவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை ஆதி மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஆதி தனது நடிப்பில் வெளிவந்திருக்கும் 'சப்தம்' படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதில் அவர் நிக்கி கல்ராணி குறித்து கூறியிருப்பதாவது : சப்தம் படத்தில் லட்சுமி மேனனும் நானும் நெருக்கமாக நடித்திருந்தாலும் அது மனதளவில் தானே தவிர உடல் ரீதியாக அல்ல. ஏனென்றால் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவைப்படவில்லை. இந்த படம் காதல் படம் அல்ல, ஆனால் காதலும் இருக்கும்.
திருமணம் ஆகிவிட்டதால் மனைவியுடன் இணைந்து தான் கதை கேட்பேன் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஒரு கதை கேட்ட பின்பு நண்பர்களிடம் சொல்வது போல அவரிடம் சொல்லி அது குறித்து பேசி கொள்வேன். அவருக்கும் எனக்கு எந்த மாதிரி கதை பிடிக்கும் என்று தெரிவதால் என் பாயிண்ட் ஆப் வியூவில் இருந்துதான் யோசிப்பார். ஆனாலும் இறுதி முடிவை நான் தான் எடுக்கிறேன்.
இப்போது கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமான நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே மனைவி நிக்கி கல்ராணியிடம் அது பற்றி சொல்லி விடுவேன். அவரும் சினிமா துறையில் இருந்தவர் என்பதால் கதைக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்வார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். இருவரும் இணைந்து படத்தில் நடிக்க இருக்கிறோம். அதுபற்றிய அறிவிப்பு முறையாக வெளிவரும். என்றார்.