மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
ரீ-ரிலீஸ் டிரெண்ட் தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களை புதிய தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்றபடி அப்டேட் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் ஜான் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விஜய், ஜெனிலியா, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 2005ம் ஆண்டில் வெளிவந்த 'சச்சின்' படத்தை இந்த வருட கோடை விடுமுறையில் மீண்டும் வெளியிட உள்ளார்கள்.
படம் வெளிவந்த போது வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், அதன்பின் அந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும், பாடல்களும் டிவியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அதை ரசித்துப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
படம் வெளிவந்த போது டிவி சானல்களில், மியூசிக் சானல்களில் அதிகம் ஒளிபரப்பான பாடல்களாக 'சச்சின்' பாடல்கள் அமைந்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சிறப்பாக படமாக்கப்பட்டவை.
ஏற்கெனவே வந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் போது புதிதாக டிரைலரை வேண்டுமானால் ரிலீஸ் செய்வார்கள். ஆனால், 'சச்சின்' படத்திற்காக லிரிக் வீடியோவை புதிதாக வெளியிடுகிறார்கள். இன்று மாலை அது வெளியிடப்பட உள்ளது. இந்த டிரெண்டை இனி வெளியாக உள்ள ரிரிலீஸ் படங்களுக்கும் ஆரம்பித்துவிடுவார்கள்.