2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாளத்தில் கடந்த டிசம்பர் மாதம் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஹனீப் அதேனி என்பவர் இயக்கியிருந்தார். மம்முட்டி நடித்த தி கிரேட் பாதர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து சில படங்களை இயக்கினாலும் இந்த மார்கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதிரடி ஆக்ஷன் படமாக கொஞ்சம் அதீத வன்முறை காட்சிகளுடன் வெளியான இந்த படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக கரண் ஜோஹர் அனுராக் காஷ்யப் போன்ற பாலிவுட் பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினார்கள். இந்த நிலையில் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள புதிய படம் ஒன்றை இயக்குனர் ஹனீப் அதேனி இயக்க இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மார்கோ படத்தின் மேக்கிங் மற்றும் அதன் வியாபார வெற்றி இரண்டையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன கரண் ஜோஹர், தனது தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கும்படி ஹனீப் அதேனியை கேட்டுக் கொண்டுள்ளாராம். அதேசமயம் இந்த படம் இந்தி மற்றும் மலையாளத்தில் உருவாகும் என சொல்லப்படுகிறது.