பிரபாஸ் படத்தில் நடிக்க காரணம் இது தான் : மாளவிகா மோகனன் | நானியின் 'ஹிட்-3' படத்தின் டீசர் வெளியீடு | 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மூன்று நாள் வசூல் எவ்வளவு? | 'கராத்தே பாபு' படம் குறித்து ரவி மோகன் வெளியிட்ட அப்டேட்! | தமிழில் சினிமாவாகும் ஹாலிவுட் வெப் தொடர் | குற்ற உணர்ச்சியில் அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சி! 'டிராகன்' படத்தை பாராட்டிய வசந்த பாலன் | நிறம் மாறும் உலகில் 4 ஹீரோயின்கள் | அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து! | பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி ரகசிய திருமணம் | பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. அடுத்தடுத்து 'அமரன், தண்டேல்' என தமிழ், தெலுங்கில் இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தற்போது ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு முன்பாகவே சாய் பல்லவி நடித்து வேறொரு ஹிந்திப் படம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.
ஹிந்தியின் முன்னணி நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஒரு காதல் கதையில் சாய் பல்லவி நடித்திருக்கிறாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏற்கெனவே முடித்துவிட்டதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்றும், அது ஒரு சிறந்த காதல் படமாக இருக்கும் என்று நம்புவதாகம் கூறியுள்ளார்.
ஜுனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகி சமீபத்தில் வெளிவந்த 'லவ்வேபா' படம் படுதோல்வி அடைந்தது. அப்படத்தில் அவரது ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடித்திருந்தார். தமிழில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'லவ் டுடே' படத்தின் ரீமேக் தான் அந்தப் படம்.
தனது மகனின் முதல் படத் தோல்வி குறித்து வருத்தமடைந்துள்ளார் அமீர்கான். சினிமாவில் வெற்றியும் தோல்வியும் வந்தே தீரும். அவற்றை சந்தித்து கடக்க வேண்டும் என்றும் தத்துவார்த்தமாகப் பேசியுள்ளார்.