2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

யாருடா மகேஷ், மாநகரம், கேப்டன் மில்லர், ராயன் என பல படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‛கூலி' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் இவர், அடுத்தபடியாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தெலுங்கில் நடித்துள்ள ‛மஜாகா' என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் கிஷன், தனக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாகவும், கழுத்தைச் சுற்றி கடுமையான வலி இருப்பதாகவும் தெரிவித்தவர், இது மருந்துகளால் சரியாகாது என்பதினால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது கைவசம் உள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இது சைனஸ் சிறிய பிரச்னைதான். ஆனால் ஊடகங்கள் மிகப்பெரிய நோய் எனக்கு இருப்பது போல பெருசுப்படுத்தி என்னை பெரிய நோயாளி போன்று செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் சந்தீப் கிஷன்.