கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. | கதைகளைத் திருடுபவர்களுக்கு இனி கஷ்டகாலம் | பராசக்தி யூனிட்டுக்கு பிரியாணி விருந்து தந்த சிவகார்த்திகேயன் |
“அம்புலி, மாயை, சதுரம் 2,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளவர் சனம் ஷெட்டி. பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதால் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சனம் ஷெட்டி திரையுலகினர் மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். “சமத்துவம் என்பது நான் பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பதில்லை. சரிசமமான வாய்ப்புகள் எங்களைப் போன்ற நடிகைகளுக்கும் வழங்க வேண்டும். அதுதான் சமத்துவம். ஹீரோக்கு கொடுக்கற சம்பளமும், ஹீரோயினுக்குக் கொடுக்கற சம்பளமும் சமமா இல்லை. ஹீரோவை அப்ரோச் பண்ற விதமும், ஹீரோயினை அப்ரோச் பண்ற விதமும் ஈக்குவலா இல்லை. எங்களை படம் நடிக்கக் கூப்புடறாங்களான்னு பார்த்தால், படுக்கத்தான் கூப்புடறாங்க, அப்படியிருக்கு அப்ரோச்,” என கடுமையாகப் பேசியுள்ளார்.