2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தெலுங்கில் ஜெர்ஸி எனும் வெற்றி படத்தை தந்த இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 12வது படத்தில் நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு 'கிங்டம்' என தலைப்பு வைத்துள்ளதாக டீசர் வீடியோ உடன் அறிவித்துள்ளனர். தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். தெலுங்கு டீசருக்கு ஜுனியர் என்டிஆரும், ஹிந்தி டீசருக்கு ரன்பீர் கபூரும் குரல் கொடுத்துள்ளார்கள்.
ஆக்ஷன் மற்றும் உணர்வுகள் நிரம்பிய படமாக உருவாகியுள்ள கிங்டம் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ‛‛புதிய அரசு, புதிய தலைவன் பிறப்பான்'' என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. மேலும், இப்படம் இவ்வருடம் மே 30ம் தேதி அன்று திரைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.