மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் ஐஸ்வர்யா ரஜினி. இந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' என்ற பாடல் உலக அளவில் வெற்றி பெற்ற போதும், இந்த படம் படு தோல்வி அடைந்தது. அதேபோல் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 'வை ராஜா வை' என்ற படமும் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவதாக விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த 'லால் சலாம்' படமும் ஐஸ்வர்யா ரஜினிக்கு தோல்வி படமாகவே அமைந்து விட்டது.
இதையடுத்து சித்தார்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளரை தேடி வந்தார் ஐஸ்வர்யா ரஜினி. ஆனால் அவரது கதையை தயாரிப்பதற்கு யாரும் முன் வரவில்லையாம். இதன் காரணமாக ஒரு புதிய பட நிறுவனம் தொடங்கி, தான் இயக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கப் போகிறாராம் ஐஸ்வர்யா. புது முகங்கள் நடிக்கும் அந்த படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகிறதாம்.