தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடியை வளர்த்துள்ள மகேஷ் பாபு, ஐதராபாத்தில் நடைபெற்ற அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அட்வென்சர் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, நானா படேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று மகேஷ்பாபு தனது மனைவி நம்ரதாவுடன் தங்களது 20வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். மனைவியுடன் சிரித்து மகிழும் ஒரு புகைப்படத்தை இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள மகேஷ் பாபு, ‛‛என்றென்றும் நான் அவளுடன் இருப்பேன்'' என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதற்கு அவரது மனைவி நம்ரதா, ‛20 அழகான வருடங்களும் எப்பொழுதும் உங்களுடன்' என்று பதிலளித்துள்ளார். மகேஷ் பாபு - நம்ரதா தம்பதிக்கு கௌதம் கட்டமனேனி, சித்தாரா கட்டமனேனி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.