கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடரான மைடியர் பூதம் தொடரில் மூசா என்கிற கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் அபிலாஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை அண்மையில் வெளியான குடும்பஸ்தன் படத்தில் மாணிக்சந்த் கதாபாத்திரத்தில் பார்த்து பலரும் வியந்தனர். ஆனால், இந்த படத்திற்கு முன்பாகவே அபிலாஷ் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், அவர் சிறிது காலம் திரைத்துறையை விட்டு விலகியிருந்தார். அதுகுறித்தான தகவலை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அபிலாஷே கூறியிருக்கிறார்.
அவர் அளித்த அந்த பேட்டியில், 'நான் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். சென்னைக்கு வந்து அப்பாவுடன் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போதே பல அவமானங்களை சந்தித்தேன். கடைசியில் மை டியர் பூதம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஸ்கூலுக்கு போக முடியாமல் போனது. அந்த தொடர் முடிந்தவுடன் படிப்பு தான் முக்கியம் என படிக்க சென்றுவிட்டேன். அதன்பிறகு ஆரி சார் நடித்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். அதனை தொடர்ந்து தோனி கபடி குழு படத்திலும் நடித்தேன். அடுத்ததாக ஒரு படத்தில் கமிட்டாக இருந்த போது தான் ஒரு தயாரிப்பாளர் இவனுக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது. இவனை வைத்து படம் பன்றீங்க? என்று கேட்டார். அது எனக்கு பெரிய மன கஷ்டத்தை கொடுத்தது.
மார்க்கெட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிவதற்காகவே புரொடக்ஷன் பக்கம் வந்தேன். குடும்பஸ்தன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டில் புரொடியசராக வேலை பார்த்து வந்த என்னை, நடிகர் பிரசன்னா சார் தான் மாணிக்சந்த் கேரக்டரில் நடிக்க வைக்க சிபாரிசு செய்தார். மாணிக்சந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்ததை பார்த்து பலரும் என்னை பாராட்டுகிறார்கள். பலர் மைடியர் பூதம் மூசா என்று என்னை அடையாளப்படுத்துவது இப்போதும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்களே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது' என அந்த பேட்டியில் அபிலாஷ் கூறியுள்ளார்.