'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வெயில் படத்தில் தனது இசை பயணத்தை தொடங்கி தற்போது நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்துவிட்ட ஜி.வி.பிரகாஷ், 25 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடந்த ஆண்டில் கேப்டன் மில்லர், தங்கலான், அமரன் உள்பட பல மெகா படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தார். இதில் தங்கலான், அமரன் படங்களின் இசை பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில். ஜி .வி .பிரகாஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் முழு ஈடுபட்டுடன் நான் இசையமைக்கிறேன். என்றாலும் அதிக டைம் எடுத்து உருவாக்கிய சில பாடல்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாது. ஆனால் சில பாடல்கள் குறைவான நேரத்தில் உருவாக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆகிய உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தங்கலான் படத்தில் இடம்பெற்ற மினுக்கி மினுக்கி என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்தார்கள். ஆனால் இந்த பாடலை அரை மணி நேரத்தில் நான் உருவாக்கி விட்டேன் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.