தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் சேதுபதி நடிப்பில், 2014ல் ரிலீசான ‛பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்குமார். அதன்பின்னர், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‛சேதுபதி' படத்தை இயக்கினார். அந்த படமும் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த அவர், ‛சிந்துபாத்' படத்தை இயக்கி, 2019ல் வெளியிட்டார். இது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு, சித்தார்த் நடிப்பில் ‛சித்தா' படத்தை இயக்கினார் அருண்குமார். இது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இந்த வெற்றி அருண்குமாருக்கு கம்பேக் ஆக அமைந்தது. கை கொடுத்தது. தற்போது விக்ரமை வைத்து ‛வீர தீர சூரன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார். இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (பிப்.,2) இயக்குனர் அருண்குமாரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் என பலர் கலந்துகொண்டு அருண்குமாரை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.