விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
கடந்த டிசம்பரில் தெலுங்கானாவில் உள்ள தியேட்டரில் அதிகாலை ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க பெருமளவு கூட்டம் கூடியது. இதில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஐதராபாத் போலீசார், அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டது.
திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி விஜய்சென் ரெட்டி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என தியேட்டர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவிட்டார். அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்ததுடன், வழக்கை பிப்.,22க்கு ஒத்திவைத்தார்.