ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
'பீஸ்ட்' படத்தை அடுத்து தமிழில் சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, அதையடுத்து விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக 'தேவா' என்ற படத்திலும் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த படம் ஜனவரி 31ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்ட போது, ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே நெருக்கமாக தோன்றும் ஒரு காட்சியை பார்த்து ஆட்சேபனை தெரிவித்தவர்கள், குறிப்பிட்ட அந்த காட்சியிலிருந்து 6 வினாடிகளை கத்தரிக்குமாறு படக்குழுவுக்கு உத்தரவிட்டு, இந்த தேவா படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ், ஹிந்தியில் மட்டுமே நடித்து வரும் பூஜாஹெக்டே, இந்த தேவா படம் பாலிவுட்டில் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் பேட்டிகளில் கூறி வருகிறார்.