சினிமாவை விட்டு விலக நினைத்த இயக்குனர் ஷபியை மீட்டு அழைத்து வந்த விக்ரம் | நடிகர் மணிகண்டனுக்கு கேட்காமலேயே இருமுறை வாழ்நாள் உதவி செய்த விஜய்சேதுபதி | புதிய படத்தால் பழைய பாவங்களை கழுவப்போகிறேன் ; ராம்கோபால் வர்மா | 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் : கவுதம் மேனன் தகவல் | அஜித்துக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்ட விஜய் படத் தலைப்பு | அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து |
2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தமிழ்த் திரையுலகத்திலிருந்து ஒரு சிலர் மட்டுமே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ஆகிய விருதுகளை மத்திய அரசு நேற்று (ஜன.,25) அறிவித்தது. இதில் கலைத்துறைக்கான பிரிவில் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித்துக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம், நடிகர்கள் தனுஷ், கார்த்தி, விக்ரம் பிரபு, ஜான் கொகென், சரத்குமார், சசிகுமார், சிரஞ்சீவி, நந்தா, பாபி சிம்ஹா, பாலாஜி முருகதாஸ், நடிகைகள் பார்வதி, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் ராஜமவுலி, கார்த்திக் சுப்பராஜ், எஸ்ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வாழ்த்துகள் குவிந்து வருவதால் #Ajithkumar, #Ajith,
#PadmaBhusan மற்றும் #PadmaBhusanAjithkumar உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள்
தொடர்ச்சியாக டிரெண்ட்டிங்கில் இருந்து வருகின்றன.